×

கோடை வெயிலுக்கு குளுகுளு என பயணிக்க காத்திருக்கும் மக்கள்: சென்னை புறநகர் மின்சார ரயில் வழித்தடத்தில் விரைவில் ஏசி ரயில்

சென்னை: சென்னை மக்களின் வரப்பிரசாதமாக உள்ள புறநகர் மின்சார ரயில் சேவையில் ஏசி மின்சார ரயிலை விரைவில் அறிமுகப்படுத்துகிறது. இதை ஒட்டி சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சென்னை மாநகரின் தவிர்க்க முடியாத பொது போக்குவரத்தாக புறநகர் மின்சார ரயில்சேவை உள்ளது. பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் தொடங்கி அலுவலகம் செல்வோர், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பயணிப்பதால் ஏசி வசதிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படுமா என்று மக்கள் மத்தியில் நீண்டகாலமாக எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

அதற்கேற்ற சென்னை கடற்கரை, செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில் இயக்க கடந்த 2019 ஆம் ஆண்டு ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே அனுமதி கோரியது. இதை அடுத்து 12 பெட்டிகள் கொண்ட 2 ஏசி மின்சார ரயில்களை தயாரிக்க சென்னை ஐசிஃப்பிற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்தது. சென்ற மாதம் பணிகள் நிறைவடைந்த நிலையில் முதல் ஏசி மின்சார ரயில் கடந்த 20 ஆம் தேதி தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை அடுத்து சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் ஏசி மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

The post கோடை வெயிலுக்கு குளுகுளு என பயணிக்க காத்திருக்கும் மக்கள்: சென்னை புறநகர் மின்சார ரயில் வழித்தடத்தில் விரைவில் ஏசி ரயில் appeared first on Dinakaran.

Tags : Chennai Suburban Electric Train ,Chennai ,Chennai Beach-Chengalpattu route ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்திற்குள் மாநகர...