×

தஞ்சையில் கோயில் இடம் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்

 

தஞ்சாவூர், பிப்.25: தஞ்சையில் கோயிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.தஞ்சை பள்ளி அக்ரகாரம் வீரமாகாளியம்மன் கோயில் இடம் மீட்பு குழு சார்பில் கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்த கோரிக்கை மனு விவரம் வருமாறு: தஞ்சை பள்ளி அக்ரகாரம் திருவையாறு – கும்பகோணம் பிரிவு சாலை அருகில் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோயிலுக்கு சொந்தமான இடம் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், கிராம மக்கள் கோயிலை புனரமைப்பு சீரமைக்க இயலவில்லை. எனவே, ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு தர வேண்டும் என மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.

The post தஞ்சையில் கோயில் இடம் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur School Agrakaram Veeramakaali Amman Temple Site Recovery Committee ,Collector ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா