- சிலம்பம்
- திருமயம்
- சிவகணேசன்
- நமுனாமுத்திரம் பிச்சித்தான்பட்டி
- புதுக்கோட்டை மாவட்டம்
- திருமயம் தாலுகா
- கபடி…
திருமயம் பிப்.25: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நமுணமுத்திரம் பிச்சித்தான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவகணேசன் (54). இவர் திருமயம் தாலுகா அலுவலக பகுதியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்து வந்துள்ளார். கபடியிலும் சிறந்த வீரராக திகழ்ந்தார். இவர் நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய போது கையில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு மீண்டும் கபடி போட்டியில் விளையாட சென்றபோது சிவகணேசன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது உடல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்கு பின்னர் நேற்று ஆம்புலன்ஸ் மூலம் திருமயம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே அவர் சிலம்பம் கற்றுக் கொடுக்கும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டது.
The post திருமயத்தில் சிலம்பம் பயிற்றுனர் மாரடைப்பால் உயிரிழப்பு appeared first on Dinakaran.