- சுத்திகரிப்பு தொழிலாளர்கள்
- குன்னம்
- Vepur
- தமிழ்நாடு துப்புரவு பணியாளர்கள் நல சங்கம்
- வேப்பூர் பஞ்சாயத்து யூனியன்
- குன்னம் தாலுக்கா, பெரம்பலூர் மாவட்டம்
- ஜனாதிபதி
- சக்திவேல்…
- தின மலர்
குன்னம், பிப்.25: வேப்பூரில் தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் நல சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். அகரம்சீகூர் தங்கராசு, துங்கபுரம் சங்கர், நன்னை அமுதா, எசனை கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் ஸ்டாலின் தமிழகம் பிரபாகரன் ஆகியோர் கவன ஈர்ப்பு உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கும் எஸ்.ஆர் புக்கை பதிவு செய்ய வேண்டியும், ஏழாவது ஊதிய குழு நிலுவைத் தொகை ₹25 ஆயிரம் வழங்க வேண்டியும், தூய்மை பணியாளர்களுக்கு விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்க கோரியும், பிரதி மாதம் ஐந்தாம் தேதிக்குள் ஊதியத்தை வழங்க கோரியும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
The post கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.