×

வேதாரண்யம் பன்னாள் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் நடத்திய காய்கறி கண்காட்சி பெற்றோர் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்

 

வேதாரண்யம்,பிப்.25: வேதாரண்யம் பன்னாள் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் காய்கறி கண்காட்சி நடத்தினர். இதில் பெற்றோர் ஆர்வத்துடன் காய்கறிகள் வாங்கி சென்றனர்.வேதாரண்யம் தாலுகா பன்னாள் அரசு உயர்நிலைப் பள்ளியில் மூன்றாம் ஆண்டாக மாணவர்கள் நடத்தும் காய்கறி கண்காட்சியை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் மோகன சுந்தரம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் 60க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களது வீட்டில் விளைந்த காய்கறிகளை சந்தைப்படுத்தி ரூ.10 முதல் ரூ.192 விற்பனை செய்தனர். காய்கறிச் சந்தையை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் குமணன் தொடங்கி வைத்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரியா விற்பனையை பெற்றுக் கொண்டார்.

 

The post வேதாரண்யம் பன்னாள் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் நடத்திய காய்கறி கண்காட்சி பெற்றோர் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர் appeared first on Dinakaran.

Tags : Vedaranyam Pannal Government High School ,Vedaranyam ,Vedaranyam Taluka Pannal Government High School ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி