×

மாசி ஏகாதசியை முன்னிட்டு அபய ஆஞ்சநேய சுவாமிக்கு வெண்ணை காப்பு அலங்காரம்

தர்மபுரி, பிப்.25: தர்மபுரி எஸ்.வி. ரோட்டில் உள்ள அபய ஆஞ்சநேய சுவாமி கோயிலில் நேற்று மாசி மாத ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை சுவாமிக்கு பால், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், பன்னீர் மற்றும் பல்வேறு வகையான பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு உபகார பூஜைகளும், வெண்ணை காப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர்கள் வாசுதேவன், பாலாஜி மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

The post மாசி ஏகாதசியை முன்னிட்டு அபய ஆஞ்சநேய சுவாமிக்கு வெண்ணை காப்பு அலங்காரம் appeared first on Dinakaran.

Tags : Abhaya Anjaneya ,Swamy ,Masi ,Ekadashi ,Dharmapuri ,Abhaya Anjaneya Swamy ,Dharmapuri S.V. Road ,Masi month Ekadashi ,Abhaya ,Anjaneya Swamy ,Masi Ekadashi ,
× RELATED புதிய தம்பதியை அருளும் மலையாமரங்க சுவாமி