- வீட்டு வாரியம்
- பிறகு நான்
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
- வடவீரநாயக்கன்பட்டி
- தேனி, ஆண்டவர்
- தேனி மாவட்ட கலெக்டர்
- கலெக்டர்
- ரஞ்சித் சிங்
- தின மலர்
தேனி, பிப். 25: தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் ஆண்டவர் என்பவர் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்கூட்டத்தில், கலெக்டர் ரஞ்ஜித்சிங்கிடம் கோரிக்கை மனு அளித்தார். இம்மனுவில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள வடவீரநாயக்கன்பட்டி அடுக்குமாடி குடியிருப்பில் முறைப்படி வீடு ஒதுக்கப்பட்டு குடியிருந்து வருகிறேன்.
இந்நிலையில், மேம்பாட்டு வாரிய ஒரு அதிகாரி ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டார். வீட்டிற்கு லஞ்சம் தராவிட்டால் என்னுடைய வீட்டிற்கு குடிநீர் விநியோகிக்க மாட்டேன் என்றார். இதன்படி, இதுவரை குடிநீர் தரவில்லை. இதனால் அருகே உள்ளவர்கள் வீட்டில் இருந்து குடிநீர் வாங்கி வருகிறேன். மேலும், எனக்கு வழங்கிய வீட்டிற்கான கிரைய பத்திரத்தையும் தர மறுக்கிறார். எனவே, மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
The post குடியிருப்பு வாரிய அதிகாரி மீது புகார் appeared first on Dinakaran.