மதுரை, பிப். 25: விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்வோர், நிலமற்ற ஏழை விவசாயிகள் பயனடையும் வகையில், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் ஏழை விவசாயிகளின் குடும்பங்களில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் மேம்பாடு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் உள்ளது. பிற திட்டங்களின் மூலமாக கல்வி உதவித்தொகை பெற்றாலும், கூடுதலாக இத்திட்டத்தின் மூலமாகவும் கல்வி உதவித்தொகை பெறலாம்.
இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஏழை விவசாயிகளின் குடும்பங்களில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமணம், மற்றும் பதிவு பெற்ற விவசாயிகளின் இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் தற்காலிக ஓய்வூதியம் ஆகியவற்றில் பயன்பெறும் வகையில், மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன்படி மாவட்டத்தின் அனைத்து வருவாய் வட்டங்களிலும் பிப்.27ம் தேதி நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post பிப்.27ல் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் appeared first on Dinakaran.