×

அனுமதியற்ற மனை பிரிவுகளை வாங்க வேண்டாம்: பழநி நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

 

பழநி, பிப்.25: பழநி நகராட்சி எல்லைகளில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வாங்க வேண்டாமென நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பழநி நகராட்சி எல்லைக்குள் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் மனை வாங்கினால் அப்பகுதிகளுக்குத் தேவையான சாலைகள், வடிகால், குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் மட்டுமின்றி, கட்டிட அனுமதி வழங்குதல் போன்ற பிற அத்தியாவசிய பணிகளையும் நகராட்சியால் செய்ய முடியாது.

அதற்கான வழிவகைகள் சட்டத்தில் இல்லை. எனவே, அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் அமைந்துள்ள மனைகளை வாங்கி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும், மனைப்பிரிவு மனைகளை வாங்கும் முன் அவற்றிற்கு அங்கீகாரம் பெறப்பட்டுள்ள விவரங்களை நகராட்சியை அணுகி அறிந்து கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அனுமதியற்ற மனை பிரிவுகளை வாங்க வேண்டாம்: பழநி நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palani Municipal Administration ,Palani ,Palani Municipality ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி