×

கால் டாக்சி டிரைவரை இரும்பு ராடால் சரமாரி தாக்குதல்: கடை உரிமையாளர் உட்பட இருவர் மீது வழக்கு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே கால்டாக்சி டிரைவரை இரும்பு ராடால் அடித்த வழக்கில் இருவர்மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அடுத்த வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே புகை சோதனை செய்யும் கடையை ஒட்டியுள்ள ஸ்டிக்கர் கடையில் தனது காருக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக செங்கல்பட்டு குண்டூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (36) காரை ஸ்டிக்கர் கடைமுன்பு நிறுத்தியுள்ளார்.

இங்கு காரெல்லாம் நிறுத்தக்கூடாது என அந்த புகை பரிசோதனை செய்யும் கடை உரிமையாளர் வெங்கடேசனிடம் கூறியிருக்கிறார். அப்போது இருதரப்பினருக்கும் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கைகலப்பாகி புகை பரிசோதனை கடை உரிமையாளர் தமிழ் மற்றும் அந்த கடையில் வேலை செய்துவரும் இருவர் சேர்ந்து கால்டாக்சி டிரைவர் வெங்கடேசனை இரும்பு ராடால் தலை மற்றும் மார்பு, சோல்டர் உள்ளிட்ட பாகங்களில் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில், பாதிக்கபட்ட வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை சேகரித்து இருதரப்பையும் விசாரித்து வருகின்றனர். டாக்சி டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்து 100க்கும் மேற்பட்ட கால்டாக்சி டிரைவர்கள் சம்பவ இடத்தில் கூடியதால் பெரும்பரபரப்பு ஏற்ப்பட்டது.

The post கால் டாக்சி டிரைவரை இரும்பு ராடால் சரமாரி தாக்குதல்: கடை உரிமையாளர் உட்பட இருவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Paranur toll plaza ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் முதன்முறையாக சென்னை...