- பாஜக அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுக கலை, இலக்கியம் மற்றும் பகுத்தறிவுப் பேரவை
- சென்னை
- திமுக கலைகள்,
- இலக்கியம் மற்றும் பகுத்தறிவு
- சபை
- தின மலர்
சென்னை: தமிழகத்துக்கு கல்வி நிதியை தர மறுக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, பேரவை தலைவர் வாகை சந்திரசேகர் தலைமை வகித்தார். கூட்டத்தில், செயலாளர்கள் திருவாரூர் அர.திருவிடம், இறையன்பன் குத்தூஸ், துணை செயலாளர்கள் திருச்சிஎழில்மாறன் செல்வேந்திரன், கெம்மங்குப்பம் சிகோமி, ஜாகீர் உசேன், ஹரிபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில், திராவிட சமுதாயம் காட்டும் நன்றிகளின் அடையாளமாக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் சார்பில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஊர்தோறும் கொடியேற்றியும் திமுக சாதனைகளை துண்டுபிரசுரங்களாக இல்லந்தோறும் வழங்கியும் தெருமுனை கூட்டங்கள் நடத்தியும் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால், அந்த இனத்தின் மொழியையும் கலாச்சாரத்தையும் அழிக்க வேண்டும் என்று குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர் வெளிப்படையாக அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக தமிழை சிதைக்கும் புதிய கல்வி கொள்கையை அறிவித்து மாநிலத்தின் கல்விக்கான நிதியை வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் தடித்தனத்தை கண்டித்து மார்ச் மாதம் முழுவதும் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் சார்பில் மாவட்டந்தோறும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியை தர மறுக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டங்கள்: திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தீர்மானம் appeared first on Dinakaran.