- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- மாவட்டம்
- கலெக்டர்
- அருண்ராஜ்
- பழங்குடியினர் நலத்துறை
- தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்
- திருவள்ளூர்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2024-2025ம் ஆண்டிற்கு பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து பழங்குடியினர் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு வழங்கிட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் இளைஞர்களை ஒருங்கிணைத்து, செங்கல்பட்டு மாவட்டத்தை மையமாக கொண்டு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பழங்குடியினர் இளைஞர்களை தெரிவு செய்யும் பணி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று(25ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5மணி வரையிலும் நடைபெற உள்ளது.
தேர்வு செய்யப்படும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து (ஆண்/பெண் இருபாலருக்கும்) 100 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு கல்வி தகுதியுடன் 18 முதல் 33 வயதுடைய செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடியினர் இளைஞர்கள் ஆதார் அட்டை, கல்வி சான்றுகள் (Transfer certificate/Mark sheet) சாதிச்சான்றிதழ், மற்றும் புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் பெருமளவில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு கலக்டர் கூறியுள்ளார்.
The post செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த பழங்குடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.