- திட்ட மருத்துவ முகாம்
- கினார் பஞ்சாயத்து
- சுந்தர்
- சட்டமன்ற உறுப்பினர்
- மதுராந்தகம்
- திட்ட மருத்துவ
- காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்
- கே. சுந்தர்
- மதுராந்தகம் ஒன்றியம்
- கினார் பஞ்சாயத்து…
- சுந்தர் எம்.எல்.ஏ
மதுராந்தகம்: கினார் ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் தொடங்கி வைத்தார். இதில், ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று சென்றனர். மதுராந்தகம் ஒன்றியம் கினார் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் கே.கே.புதூர் பள்ளியில் நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் தேவி அரசு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பொன்.சிவக்குமார் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் ஹரிஹரசுதன் அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ குத்து விளக்கேற்றி மருத்துவ முகாமை தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு மற்றும் இல்லம் தேடி மருத்துவம் சார்பில் மருந்து மாத்திரை பெட்டிகளும் வழங்கினார். மேலும், டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் சத்தான உணவுகள் ஒன்பது குறித்த கண்காட்சி நடைபெற்றது.
இந்த முகாமில், 550க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பொது மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம் என சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் மாவட்ட கவுன்சிலர் ராஜா ராமகிருஷ்ணன், அவைத் தலைவர் சசிகுமார், துணை செயலாளர்கள் சக்கரபாணி, சுமித்ரா தேவி, முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் சிகாமணி, பொருளாளர் குமார், இளைஞரணி அமைப்பாளர் தினேஷ், துணை அமைப்பாளர்கள் ஜோதிலிங்கம், சக்திவேல், ஜெயக்குமார், சீனிவாசன், செல்வபிரதாப், சிட்டிபாபு உள்ளிட்ட ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
The post கினார் ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்: சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.