×

வங்கதேசத்தில் விமானப்படை தளத்தின் மீதான தாக்குதல் முறியடிப்பு: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

டாக்கா: வங்கதேசத்தின் காக்ஸ் பஜாரில் சமிரி பாரா அருகே விமானப் படை தளம் இயங்கி வருகின்றது. இந்த விமானப்படை தளத்தின் மீது நேற்று பிற்பகல் சிலர் திடீரென தாக்குதலை நடத்தினார்கள். விரைந்து செயல்பட்ட பாதுகாப்பு படையினர் இந்த தாக்குதலை முறியடித்தனர். மோதலின்போது துப்பாக்கி சூட்டில் உள்ளூரை சேர்ந்த வர்த்தகர் ஷிஹாப் கபீர்(30) என்பவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக விமானப்படை தளம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தாக்குதலுக்கான காரணம் குறித்து முழுவிசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த தாக்குதல் விமானப்படை தள விரிவாக்கத்துக்கு எதிராக நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்களை வேறு இடத்துக்கு மாறும்படி கூறியதால் மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

The post வங்கதேசத்தில் விமானப்படை தளத்தின் மீதான தாக்குதல் முறியடிப்பு: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Attack on Air Force base ,Bangladesh ,Dhaka ,Samiri Para ,Cox's Bazar, Bangladesh ,Attack on Air Force ,Dinakaran ,
× RELATED ஊழல் வழக்கில் ஹசீனா, அவரது மகளுக்கு...