×

பட்டியலின மக்கள் வழிபட தடை விதிக்கக் கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டம் ஆண்டார் கொட்டாரம் பகுதியில் உள்ள கடவு காத்த அய்யனார் கோயிலில், பட்டியலின சமூகத்தினர் வழிபாடு செய்வதை தடுப்போர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் சாமி தரிசனம் செய்ய எவ்வித தடையும் விதிக்கக் கூடாது. கோயில் உள்ள சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டால் உடனடியாக காவல்துறையை அணுக வேண்டும். உரிய பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்ய காவல்துறை நடவடிக்கை
எடுக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் விவேகா சுரேஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

The post பட்டியலின மக்கள் வழிபட தடை விதிக்கக் கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,High Court ,Kadavu Katha Ayyanar ,Andar Kottaram ,
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...