×

விசிகவிற்கு அங்கீகாரம் பெற்று தந்த திருமாவளவனுக்கு பாராட்டு தெரிவிக்கும் கூட்டம்

 

திருவாரூர், பிப். 24: விடுதலை சிறுத்தை கட்சிக்கு அங்கீகாரம் பெற்று தந்த எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் திருவாரூரில் மைய மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட செயலாளர் வடிவழகன், வி.த.செல்வம் தொகுதி துணை செயலாளர் மனோகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகாரம் பெற்றுத்தந்த எழுச்சி தமிழருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர் ரஜினிகாந்த், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், நாகை நாடாளுமன்ற தொ.செ. இடிமுரசு, தஞ்சை நாடாளுமன்ற தொகுதி செயலா ளர் இளந்தென்றல், தஞ்சை மண்டல செயலாளர் சதா. சிவக்குமார், மருத்துவர் தாமரையார் மற் றும் மண்டல துணைசெய லாளர் மண்ணை ரமணி ஆகியோர் பேசினர். விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் பிஎஸ்.மாசிலாமணி, காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் வீரமணி, ஒன்றிய செயலாளர் சி.பி.ஐ.எம் ஆர்எஸ்.சுந்தரய்யா, மதிமுக மாநில கொள்கை பரப்பு செயலாளர் கூடூர் சீனிவாசன், திராவிட கழகத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் சீனிசெல்வம் மற்றும் மமக மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post விசிகவிற்கு அங்கீகாரம் பெற்று தந்த திருமாவளவனுக்கு பாராட்டு தெரிவிக்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Thiruvarur ,Thol Thirumavalavan ,Central ,District ,Thanga Tamilselvan ,Former ,Vadizhagan ,V.T. Selvam… ,
× RELATED திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின்...