திருவாரூர், பிப். 24: திருவாரூர் மாவட்ட எஸ்.பி கருண்கரட் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் குட்கா பொருட்கள் விற்பனை குறித்து கடைகளில் நேற்று ஆய்வு நடத்தினர்.
அதன்படி நன்னிலம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட சன்னாநல்லூர் சந்தைபேட்டை தெருவில் பெட்டிகடை ஒன்றில் போலீசார் ஆய்வு செய்த போது ரூ.1,600 மதிப்புடைய குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இதுதொடர்பாக கடை உரிமையாளர் சன்னாநல்லூரை சேர்ந்த ஹரிஹரன் (28) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த ஆதலையூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஸ் (40) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
The post குட்கா பொருள் விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.