- மெலட்டூர் உன்னதபுரீஸ்வரர் கோவில்
- தஞ்சாவூர்
- உன்னதபுரீஸ்வரர் கோயில்
- மேலட்டூர்,
- பாபநாசம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்
- சிவகங்கை
- கீழகுளம்
தஞ்சாவூர், பிப்.24: மெலட்டூர் உன்னதபுரீஸ்வரர் கோவில் குளம் தூர்வார வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா மெலட்டூரில் உன்னத புரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு கோவில் எதிரே கீழக்குளம்எனப்படும் சிவகங்கை குளம் அமைந்துள்ளது. இந்த குளம் தற்போது பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. மெலட்டூர் பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சி சார்பில் ரூ.1 கோடியே 60 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு பக்தர்கள் நீராட படித்துறை அமைக்கப்பட்டு, குளக்கரையை சுற்றிலும் சிமெண்ட் கற்கள் பதிக்கப்பட்டு. சுற்று சுவருடன் கூடிய கம்பி வேலி அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் பொதுமக்கள் குளத்தை சுற்றிலும் உள்ள நடைமேடையில் நடைபயிற்சி மேற்கொண்டனர். நாளடைவில் ஆங்காங்கே சிமெண்ட் காரைகள் பெயர்ந்து புல்பூண்டுகள் மண்டியதால் பொதுமக்கள் யாரும் நடைமேடையை பயன்படுத்த முடியாமல் போனது. அதோடு, குளத்தில் உள்ள நீர் முற்றிலும் மாசு படிந்து, குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் நிரம்பி காட்சியளிக்கின்றது. எனவே பேரூராட்சி நிர்வாகம் கோவில் குளத்தை தூர்வாரி நீராடும் வகையில் பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மெலட்டூர் உன்னதபுரீஸ்வரர் கோயில் குளம் தூர்வார வேண்டும் appeared first on Dinakaran.