கெங்கவல்லி, பிப்.24: கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரியில், 50 மில்லியன் கனஅடி நீர் இருப்புள்ள நிலையில், பயிர் செய்வதற்காக நீர் தேவைப்படுவதாக விவசாயிகள் பொதுப்பணித்துறையிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து உதவி செயற்பொறியாளர் ரத்தினவேல் தலைமையிலான அதிகாரிகள், வலசக்கல்பட்டி ஏரியில் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பினர். இதையடுத்து வலசக்கல்பட்டி ஏரியில் இருந்து 40 நாட்களுக்கு 30 மில்லியன் கனஅடி நீரை 850 பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
The post வலசக்கல்பட்டி ஏரியில் தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.