இலுப்பூர், பிப்.24: இலுப்பூர் வடுகர் தெருவில் சாலை நடுவில் உள்ள மின் கம்ப த்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று இப் பகுதி மக்கள் அரசுக்கு கோ ரிக்கை விடுத்துள்ளனர்.
இலுப்பூர் பேருராட்சியில் 3 வது வடுகர் தெருவில் தெரு சிமென்ட் சாலையின் நடுவே மின் கம்பம் உள்ளது. இந்த சிமென்ட் சாலையை வடுகர் தெரு மற்றும் சீத்தாராமன் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் பயன் படுத்தி வருகின்றனர். இந்த 3வது வடுகர் தெரு சிமென்ட் சாலை நடுவே மின் கம்பம் உள்ளதால் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கனரக வாகனங்களில் பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் தொலைவில் இறக்கி மாற்று ஏற்பாடு செய்து பொருள்களை எடுத்து செல்லுகின்றனர். இதனால் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆகவே வாகனங்கள் இடையூறு இல்லாமல் சென்று வர மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.
The post இலுப்பூர் வடுகர் தெருசாலையில் மின்கம்பத்தால் இடையூறு இடம்மாற்ற கோரிக்கை appeared first on Dinakaran.