×

கல்லூரி மாணவிகளுக்கு பயிர் மேலாண்மை பயிற்சி

 

பெரம்பலூர்,பிப்.24: பெரம்பலூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வேளாண்மைக் கல்லூரி மாணவிகளுக்கான பயிர் மேலாண்மை பயிற்சி நேற்று நடைபெற்றது.
பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் மேலாண்மை பயிற்சி பெரம்பலூர் வேளாண்மை உதவி இயக்குனர் தாகூர் தலைமையில் நடைபெற்றது. இதில் பயிர் பாதுகாப்புத் துறையின் கீழ், உயிரியல் கட்டுப்பாடுகளின் முக்கியத்துவத்தையும், அதன் பலன்களையும் துறை இயக்குனர் பாரத் கலந்து கொண்டு விரிவாக எடுத்துரைத்தார். இந்த பயிற்சியில் திருச்சி எம்.ஆர் பாளையத்தை சேர்ந்த நாளந்தா வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
பயிற்சியில் பங்கேற்ற மாணவிகள் கூறும் போது, நாங்கள் இந்த பயிற்சியின் மூலம் உயிரியல் கட்டுப் பாடுகளான டிரோக்கோ டெர்மா விரிடி, சூடோ மோனாஸ், ப்ளோரசன்ஸ், மெட்டாரைசியம் அனிசோ பிளியே உள்ளிட்ட பலவற்றின் உற்பத்தி செயல்முறை, அதனை பயன்படுத்தும் விதம் மற்றும் பயன்கள் குறித்து நேரில் கண்டு செயல் முறை விளக்கங்களுடன் பயிற்சி பெற்றது, மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனைப் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளிடம் கொண்டு செல்வது சிறந்த பயனை அளிக்கும் எனக் கூறினர்.

 

The post கல்லூரி மாணவிகளுக்கு பயிர் மேலாண்மை பயிற்சி appeared first on Dinakaran.

Tags : PERAMBALUR, FR.24 ,PERAMBALUR ,Agriculture Tagore ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் நாய்கள்,...