- Jayankondam
- தத்தனூர்
- தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- அரியலூர் மாவட்டம்
- அரியலூர் மாவட்ட சதுரங்க சங்கம்...
- தின மலர்
ஜெயங்கொண்டம், பிப்.24: தத்தனூரில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அரியலூர் மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. போட்டிகளை கல்லூரி தாளாளர் எம்.ஆர்.ரகுநாதன் துவக்கி வைத்தார்.
இதில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 7 வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவ மாணவியர்களுக்கு தனித்தனி மேஜைகள் அமைக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கு தகுதி பெறுவார்கள். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
The post மாநில அளவிலான சதுரங்கப் போட்டி appeared first on Dinakaran.