- இராசிபுரம்
- நாமகிரிப்பேட்டை
- மங்களபுரம்
- திம்மநாயக்கன்பட்டி
- பேளுக்குறிச்சி
- மெட்டாலா
- ஆயில்பட்டி
- ராசிபுரம் உழவர் சந்தை
ராசிபுரம், பிப்.24: ராசிபுரம் உழவர் சந்தைக்கு நாமகிரிப்பேட்டை, மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி, பேளுகுறிச்சி, மெட்டாலா, ஆயில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். விடுமுறை தினமான நேற்று, வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. சந்தையில் தக்காளி கிலோ ₹16க்கும், கத்தரி ₹35க்கும், வெண்டை ₹35க்கும், புடலை 25க்கும், பீர்க்கன்காய் ₹35க்கும், பாகல் 40, சுரைக்காய் ₹12, பச்சை மிளகாய் ₹32, முருங்கை ₹90, சின்னவெங்காயம் ₹48, பெரியவெங்காயம் ₹40, முட்டைகோஸ் ₹20, கேரட் ₹75, பீன்ஸ் ₹50, பீட்ரூட் ₹30க்கு என விற்பனையானது.
நேற்று ஒரே நாளில் 233 விவசாயிகள் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மொத்தம் ₹12.23 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனையானது. 5,938 பேர் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர். கடந்த வாரத்தை விட தக்காளி, புடலை, முருங்கை ஆகியவை விலை மிகவும் குறைந்திருந்தது. கடந்த வாரம் கிலோ 20க்கு விற்பனையான தக்காளி நேற்று ₹16க்கு விற்பனையாது. அதேபோல் 40க்கு விற்ற புடலை 25க்கு விற்பனையானது. கிலோ ₹150க்கு விற்பனையான முருங்கை ₹90க்கு விற்றது.
The post ₹12 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை appeared first on Dinakaran.