×

தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள்

 

ஓசூர், பிப்.24: ஓசூரில் ஆபத்தான நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சுக்காக பயணிகள் நிற்பதால், டவுன் பஸ்கள் சர்வீஸ் சாலையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், அசுர வேகத்தில் சென்று வரும் நிலையில், ஓசூர் முத்துமாரியம்மன் கோயில், மூக்கண்டப்பள்ளி, சிப்காட், பத்தலபள்ளி, பேரண்டபள்ளி, குமுதேப்பள்ளி, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆபத்தான நிலையில் பயணிகள் பஸ்சுக்காக நிற்கின்றனர். குறிப்பாக இரண்டு சிப்காட் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் தேசிய நெடுஞ்சாலையோரம் நிற்கின்றனர்.

பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பொதுமக்கள் வசதிக்கேற்ப டவுன் பஸ்களை சர்வீஸ் சாலையில் இயக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் பொதுமக்கள் கடந்து செல்வதால், ஜூஜூவாடி, எம்.எம்.நகர் எதிரில், மாசு கட்டுப்பாட்டு வாரியம், சீதாராமய்யா மேடு ஆகிய பகுதிகளில் இரும்பு ஆங்கில்களால் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பத்தலபள்ளி, பேரண்டபள்ளி ஆகிய பகுதிகளிலும் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். விபத்துகளை தடுக்க டவுன் பஸ்களை சர்வீஸ் சாலையில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் appeared first on Dinakaran.

Tags : National Highway ,Hosur ,Bangalore-Chennai National Highway ,Asura… ,Dinakaran ,
× RELATED வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து 30...