- ஈரோடு மண்டல தடகளப் போட்டிகள்
- சீனபுரம் கொங்கு
- வெள்ளாளர் பாலிடெக்னிக்
- பெருந்துறை
- சீனபுரம்
- கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரி
- முதல்வர்
- விஸ்வநாதன்
- கொங்கு வேலலார் பாலிடெக்னிக்
- தின மலர்
பெருந்துறை,பிப்.24: பெருந்துறை, சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரியில், ஈரோடு மண்டல அளவிலான தடகள போட்டிகள், 21ம் தேதி மற்றும் 22ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இப்போட்டிகளை, கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் மற்றும் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் கொடியேற்றி துவக்கி வைத்தனர்.நிகழ்ச்சிக்கு, கல்லூரி நிர்வாக அதிகாரி விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
கல்லூரி மின்னியல் துறை தலைவர் தமிழரசி வரவேற்றார்.இப்போட்டியில், மாணவ மாணவிகள் பிரிவில் அதிக புள்ளிகளை பெற்று, பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி முதல் இடத்தை பெற்றது.போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. மேலும்,போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ஓம்பிகாசம் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.
The post சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக்கில் ஈரோடு மண்டல தடகள போட்டிகள் appeared first on Dinakaran.