×

இந்தி திணிப்பைக் கண்டித்து தேனியில் திகவினர் ஆர்ப்பாட்டம்

தேனி, பிப். 24: தேனியில் ஒன்றிய அரசு இந்தியை திணிப்பதை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், தேனி நகர் பழைய பஸ்நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுருளிராஜூ தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பூ.மணிகண்டன் வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, மும்மொழிக்கல்வி பெயரில் இந்தியை திணிப்பதை கண்டித்தும், மும்மொழிக்கொள்கையை ஏற்றால்தான் நிதியை தரமுடியும் எனும் ஒன்றிய அரசைக் கண்டித்து, கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மதிமுக மாவட்ட துணை செயலாளர் பொன்முடி, ஆதிதமிழர் பேரவை மாவட்ட செயலாளர் நீலக்கணலன், திக பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன், ஸ்டார்நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post இந்தி திணிப்பைக் கண்டித்து தேனியில் திகவினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Thikavis ,Theni ,Dravidar Kazhagam ,Union Government ,Theni District ,Theni Nagar ,
× RELATED சர்ச்சை பேச்சு மனப்பூர்வமாக...