×

மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு விசேஷ யாகம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

 

குன்றத்தூர், பிப். 24: மாங்காட்டில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான, காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் காஞ்சி மகா பெரியவரால் நிறுவப்பட்ட, ‘அர்த்த மேரு மகாசக்கரம்’ அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோயிலில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்காக ஸ்ரீவித்யா சரஸ்வதி ஹோமம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை கோயில் வளாகத்தில் ஸ்ரீவித்யா சரஸ்வதி ஹோமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்வில் மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் பேனா, பென்சில், ரப்பர் போன்ற பொருள்கள் யாகத்தின் பூஜையில் வைக்கப்பட்டு, யாகத்தின் முடிவில் விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

பின்னர் அதனுடன் சேர்த்து கேசரி, பொங்கல் போன்ற பிரசாதமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாங்காடு, குன்றத்தூர், பூந்தமல்லி ஆகிய சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொது தேர்வு எழுத இருக்கும் மாணவ, மாணவிகள் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கோயில் நிர்வாகம் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சித்ராதேவி மற்றும் கோவில் பரம்பரை தர்மகர்த்தா மணலி சீனிவாசன் ஆகியோர் மேற்கொண்டனர்.

The post மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு விசேஷ யாகம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Mangadu ,Kamakshi ,Amman ,Kundrathur ,Kamakshi Amman temple ,Artha ,Mahasakkaram ,Kanchi Maha Periyavar ,Kamakshi Amman ,
× RELATED ‘என்ன தா.மோ.அன்பரசனையே பாத்துட்டு...