×

வாக்காளர் பட்டியலில் வெளியாட்கள் பெயர் தேர்தல் ஆணையம்-பாஜ சதி: திரிணாமுல் குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அடுத்தாண்டு சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் பொது செயலாளர் குணால் கோஷ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,‘‘மேற்கு வங்கத்தின் எல்லை பகுதிகளில் முறையான சரிபார்ப்பு இல்லாமல் வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையத்தின் ஒரு சில அதிகாரிகள் சேர்க்கின்றனர்.

அந்நிய நாட்டில் இருந்து ஊடுருவலை தடுப்பது எல்லை பாதுகாப்பு படையின் பணியாகும். வாக்காளர் பட்டியலில் அங்கீகாரமற்ற வகையில் பெயர்கள் சேர்க்கப்பட்ட புகார்கள் ஒன்றிய அரசால் தான் கையாளப்பட வேண்டும். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பராய்பூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட சம்பஹதி பகுதியில் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக செய்தி வந்துள்ளன. ’’ என்றார்.

The post வாக்காளர் பட்டியலில் வெளியாட்கள் பெயர் தேர்தல் ஆணையம்-பாஜ சதி: திரிணாமுல் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Trinamool ,Kolkata ,Trinamool Congress government ,West Bengal ,Chief Minister ,Mamata Banerjee ,Trinamool Congress ,General Secretary ,Kunal Ghosh ,West Bengal… ,Commission ,Dinakaran ,
× RELATED டெல்லி சிபிஐ ஆபிசில் புஸ்ஸி, ஆதவ் ஆஜர்...