×

சீனா விசா ஊழல் கார்த்தி சிதம்பரம் மனு மார்ச் 5க்கு ஒத்தி வைப்பு

புதுடெல்லி: சீனாவை சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்களை பஞ்சாப் அழைத்து வர நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்புகளுக்கு மேல் விசா வழங்கியது தொடர்பாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது நெருங்கிய நண்பரான ஆடிட்டர் பாஸ்கரராமன் ஆகியோர் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா முன்பு கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது தரப்புவாதங்களை கேட்ட நீதிபதி, மார்ச் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

The post சீனா விசா ஊழல் கார்த்தி சிதம்பரம் மனு மார்ச் 5க்கு ஒத்தி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Karti Chidambaram ,New Delhi ,Former Union Minister ,P. Chidambaram ,Auditor ,Bhaskar Raman ,China ,Punjab ,Dinakaran ,
× RELATED சிபிஐ வழக்கை ரத்து செய்ய கோரிய கார்த்தி சிதம்பரம் மனு ஆக.4க்கு ஒத்திவைப்பு