×

அரசுப்பள்ளிகளில் இணையதள வசதி: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிவேக பிராட்பேண்ட் இணைய சேவை வசதிகள் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளன. தற்போது இந்த சேவையானது 2 திட்டங்களாக வகுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொடக்கப் பள்ளிகளுக்கு( 50 எம்பிபிஎஸ் வேகம்) ரூ.710-ம், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு(100 எம்பிபிஎஸ் வேகம்) ரூ.900 இணையச் சேவை கட்டணமாக விடுவிக்கப்படும்.

அதேபோல், இணையச் சேவைக்கான மாதாந்திர கட்டணத்தை வரும் ஏப்ரல் மாதம் முதல் இயக்குநரகம் வாயிலாகவே பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நேரடியாக செலுத்தப்படும். எனவே, பிஎஸ்என்எல் இணைய சேவை தரவுகளை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் அதை உடனடியாக செய்யவேண்டும். பிற நிறுவனங்கள் மூலமாக இணைய சேவை பெற்ற அரசுப் பள்ளிகளும், இணைய சேவை வசதியை பெறாத பள்ளிகளும் பிஎஸ்என்எல் நிறுவன இணைய வசதியை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post அரசுப்பள்ளிகளில் இணையதள வசதி: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : School Education Department ,Chennai ,Integrated School Education State Project Directorate ,BSNL ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சாதி அடையாளத்தை குறிக்கும் கயிறு, டீ...