×

சிதம்பர நடராஜர் கோயிலில் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்வது காலகாலமாக இருக்கும் நடைமுறை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: சென்னை, மயிலாப்பூரில் திருவள்ளுவர் கோயிலானது 61,774 சதுர அடி நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இக்கோயிலின் முக்கிய வருவாயாக கட்டணமுறை வாகன நிறுத்துமிடம், திருமண மண்டப வாடகையும் உள்ளது. இந்நிலையில் இந்த கோயிலில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் ஆய்வுசெய்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: பக்தர்கள் கனக சபையின் (சிதம்பர நடராஜர் கோயில்) மீது ஏறி தரிசனம் செய்வது ஏதோ புதிய நடைமுறை அல்ல.

ஏற்கனவே காலகாலமாக இருந்து வந்த நடைமுறை. இவ்விஷயம் தொடர்பாக சமீபத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்ய தடை ஏதும் விதிக்கவில்லை. ஆகவே இந்த சட்ட போராட்டம் என்பது இன்று நேற்று அல்ல. 2000 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இறைவன் முன்பு அனைவரும் சமம் என்பதை நிரூபிக்கின்ற ஆட்சியாக நிச்சயம் திராவிட மாடல் ஆட்சியினுடைய முதலமைச்சர் அனைத்து வகையிலும் முன்னெடுப்பார் என்றார்.

The post சிதம்பர நடராஜர் கோயிலில் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்வது காலகாலமாக இருக்கும் நடைமுறை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kanaka Sabha ,Chidambara Natarajar Temple ,Minister ,Sekharbhabu ,Chennai ,Thiruvalluvar Temple ,Mayilapur, Chennai ,Ecoil ,Shekarbabu ,
× RELATED மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது