×

ஓடிடியில் சாக்‌ஷி அகர்வால் படம்

காதலர்கள் செல்போனை மாற்றிக் கொண்டால் என்னென்ன சிக்கல்கள் வரும் என்பதை சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’ படம் சொன்னது. இது எல்லா இளைஞர்களுடன் கனெக்ட் ஆனதால் படமும் வெற்றி பெற்றது. தற்போது அறிமுக இயக்குனர் சக்திவேல் என்பவர் இதை கொஞ்சம் மாற்றி யோசித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு கணவனும், மனைவியும் செல்போனை மாற்றிக் கொண்டால் என்ன நடக்கும் என்பது பற்றி அவர் இயக்கி இருக்கும் படம்தான் ‘ரிங் ரிங்’. பிரச்னைகளை காமெடியாகவும், கொஞ்சம் சீரியசாகவும் சொல்கிறார்.இந்த படத்தில் விவேக் பிரசன்னா, சாக்‌ஷி அகர்வால், சஹானா ஷெட்டி, டேனியல் அன்னா போப் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் ‘மூவி சூப்பர் பேன்ஸ்’ என்ற ஓடிடி தளத்தில் வருகிற ஜூலை 5ம் தேதி வெளியாகிறது. ‘செல்போன் ஒவ்வொரு மனிதர்களின் வாழ்விலும் ஊடுருவி நிற்கிறது. செல்போன் இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாது. ஒவ்வொருவரின் அந்தரங்க நண்பனாகவும் செல்போன் இருக்கிறது. கணவன், மனைவி இருவருமே செல்போன் பயன்படுத்தும்போது அவரவருக்கு தனிப்பட்ட விஷயங்கள் இருக்கும். அது என்ன? அதனால் வரும் சிக்கல்கள் என்ன என்பதை காமெடியாக சொல்லும் படம்தான் இது. சிரித்துவிட்டு கடந்து போகிற படமாக இல்லாமல் சிந்திக்க வைக்கிற படமாகவும் இருக்கும்’ என்கிறார் சாக்‌ஷி அகர்வால்.

The post ஓடிடியில் சாக்‌ஷி அகர்வால் படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sakshi Aggarwal ,Sakthivel ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே நிபந்தனை...