- கவாடி திருவிழா
- சீர்காழி தென்பதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்
- சீர்காழி
- ராஜராஜேஸ்வரி
- அங்காள
- பரமேஸ்வரி அம்மன் கோயில்
- சீர்காழி தென்பாதி, மயிலாடுதுறை மாவட்டம்
- மாயன சூரை விழா
- மகா சிவராத்திரி
- காவடி
சீர்காழி, பிப். 22: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் ராஜராஜேஸ்வரி (எ) அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வருகிற 26ம் தேதி மகா சிவராத்திரி அன்று மயான சூறை விழா நடைபெறுவதை முன்னிட்டு நேற்று காவடி மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.விழாவை முன்னிட்டு சீர்காழி நாகேஸ்வர முடையார் கோயில் பகுதியில் இருந்து பக்தர்கள் அலகு காவடி எடுத்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோயிலை வந்தடைந்தன. அப்போது அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.
The post சீர்காழி தென்பாதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் காவடி திருவிழா appeared first on Dinakaran.
