×

சிறுபான்மையின நல ஆணையர் தலைமையில் தேனியில் 25ம் தேதி ஆலோசனைக் கூட்டம்

 

தேனி, பிப். 22: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண், துணைத் தலைவர் எம்.எம்.அப்துல்குத்தூஸ் மற்றும் ஆணையக்குழு உறுப்பினர்கள் வருகிற 25ம்தேதி தேனி மாவட்டத்திற்கு வருகின்றனர். அன்றைய தினம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கூட்ட அரங்கில் சிறுபான்மையினர் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்து தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து அலோசிக்க உள்ளனர்.

இக்கூட்டத்தில் சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தை சேர்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தலைமையிலான குழுவினரை சந்தித்து குறைகளையும், சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்கான ஏற்ற கருத்துக்களை தெரிவிக்கலாம். இத்தகவலை தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜித்சிங் தெரிவித்துள்ளார்.

The post சிறுபான்மையின நல ஆணையர் தலைமையில் தேனியில் 25ம் தேதி ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Minority Welfare Commissioner ,Theni ,Tamil ,Nadu State Minority Commission ,Rev. ,Fr. So.Jo.Arun ,Vice Chairman ,M.M.Abdulqutthus ,Theni district ,Theni District Collector’s Office… ,Minority ,Commissioner ,Dinakaran ,
× RELATED தமிழக – கேரள எல்லையோரப் பகுதி...