×

தூத்துக்குடி மாநகர 15வது வார்டு காங். நிர்வாகிகள் தேர்வு

தூத்துக்குடி, பிப். 22: தூத்துக்குடி மாநகர் 15வது வார்டு காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாநகராட்சி 15வது வார்டு காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்வு கூட்டம், மடத்தூரில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் ஆலோசனையின் பேரில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் ஷாஜஹான் மேற்பார்வையில் நடந்த கூட்டத்திற்கு மேற்கு மண்டல தலைவர் செந்தூர்பாண்டி தலைமை வகித்தார். மாநில சிறுபான்மை பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியம் முன்னிலை வகித்தார். வார்டு தலைவராக பொன்ராஜ், துணை தலைவர்களாக அந்தோணிராஜ், துரைப்பாண்டியன், பொருளாளராக ராபர்ட், செயலாளராக எபினேசர்டோனல், செயற்குழு உறுப்பினர்களாக ராஜா, வளன்ராஜ், ஜெயசெல்வன், ராயப்பன், வக்கீல் சோலைராஜா, ஜெயசுந்தரபாண்டியன், செந்தூர்பாண்டி, இசக்கிபாண்டி, மாரியப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

The post தூத்துக்குடி மாநகர 15வது வார்டு காங். நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi Municipal Corporation ,15th Ward Congress ,Thoothukudi ,Thoothukudi Municipal ,Corporation ,Madathur ,Municipal ,District ,Muralitharan ,Thoothukudi Legislative Assembly ,Thoothukudi Municipal Corporation 15th ,Ward ,Congress ,Dinakaran ,
× RELATED 2ம் நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டம்