- நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரி மண்டல தடகளப் போட்டி தொடக்க விழா
- நாசரேத்
- நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரி
- நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம்
- சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரி
- தின மலர்
நாசரேத், பிப். 22: நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் மண்டல அளவிலான தடகளப்போட்டிகளின் துவக்க விழா நடந்தது. நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் நெல்லை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப்போட்டிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இதன் துவக்க விழாவிற்கு நாசரேத் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மேலாளர் பாண்டிகுமார் தலைமை வகித்து தேசியக்கொடி ஏற்றி போட்டியை துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்றார்.
போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 20 பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ- மாணவியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஆசிரியர் ஜான் வெலிங்டன் தொகுத்து வழங்கினார். வெற்றி பெற்ற மாணவ- மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டி இன்றும்(சனிக்கிழமை) நடக்கிறது. ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் ரவீந்திரன் சார்லஸ் தலைமையில் முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், பர்சார் தனபால், உடற்கல்வி இயக்குநர் விமல் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
The post நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் மண்டல தடகளபோட்டி தொடக்க விழா appeared first on Dinakaran.