- ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றம்
- ஆரணி
- மாவட்ட சிவில் நீதிமன்றம்
- மாவட்ட நீதிபதி
- Madhusudhanan
- திருவண்ணாமலை நீதிமன்றம்
- நீதிமன்றம்
- தின மலர்
ஆரணி, பிப். 22: ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வருடாந்திர ஆய்வு நேற்று நடந்தது. இதில், திருவண்ணாமலை நீதிமன்ற மாவட்ட நீதிபதி மதுசூதனன் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது, உரிமையியல் நீதிமன்றத்தில் உள்ள வருகை பதிவேடு, நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் கோப்புகள், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, கடந்த ஓராண்டுகளில் முடிக்கப்பட்ட வழக்குகளின் விவரங்கள் குறித்து உரிமையியல் நீதிபதியிடம் கேட்டறிந்தார். பின்னர், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நீதிபதிக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்களிடம் ஆலோசணை நடத்தினர். அப்போது, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை உடனுக்குடன் முடிக்க வழக்கறிஞர்கள் நீதிபதிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். முன்னதாக, ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி மதுசூதனன் மரக்கன்றுகளை நட்டார். இதில், கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெயஸ்ரீ, சார்பு நீதிபதி தாவுத்தம்மாள், மாவட்ட உரிமையில் நீதிபதி(பயிற்சி) கோபெருந்தேவி, வழக்கறிஞர் சங்க தலைவர் ஸ்ரீதர், அரசு வழக்கறிஞர் ராஜமூர்த்தி, வனசரக அலுவலர் ரவிக்குமார் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post மாவட்ட நீதிபதி வருடாந்திர ஆய்வு ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் appeared first on Dinakaran.