×

துறையூர் தெப்பக்குளம் அருகே தமிழ்நாடு கிராம வங்கி கிளை திறப்பு

திருச்சி, பிப்.21: தமிழ்நாடு கிராம வங்கி தனது 671வது கிளையை திருச்சி மாவட்டம் துறையூர் தெப்பக்குளத்திற்கு எதிரில் நேற்று (20ம்தேதி) துவங்கியது. புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியின் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் வங்கியின் தலைவர் மணி சுப்ரமணியன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் வங்கியின் தலைவர் மணி சுப்ரமணியன், வங்கியின் துணை பொது மேலாளர் டேவிட் விஜயகுமார், மண்டல மேலாளர் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். வங்கியின் சாதனைகளை பற்றி தலைவர் மற்றும் துணை பொது மேலாளர்கள் பேசினர். மேலும் அற்புதம் 555 வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு தொடங்கியோருக்கு டெபாசிட் பாண்டுகள் வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் அதிகபட்ச வட்டியாக 8.25% வழங்கப்படுகிறது. முடிவில் கிளையின் மேலாளர் பிரேம்குமார் நன்றி கூறினார்.

The post துறையூர் தெப்பக்குளம் அருகே தமிழ்நாடு கிராம வங்கி கிளை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Grama Bank ,Thurayur Theppakulam ,Trichy ,Trichy district ,Balasubramanian ,Puthanampatti Nehru Memorial College ,Mani Subramanian ,
× RELATED பனையூர் பள்ளியில் கணித மன்ற விழா