×

புறவழிச்சாலையின் தரம் குறித்து பொறியாளர் ஆய்வு

திருச்செங்கோடு, பிப்.21: திருச்செங்கோடு நகருக்கு புறவழிச்சாலை அமைத்தல் பணியினை, சென்னை நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் பார்வையிட்டு, சாலையின் தரத்தினை ஆய்வு செய்தார். ஆய்வின் போது சேலம் கண்காணிப்புப் பொறியாளர் சரவணன், கோட்டப் பொறியாளர் அகிலா, தரக்கட்டுப்பாடு கோட்டப்பொறியாளர் கதிரேசன், உதவிக்கோட்டப் பொறியாளர்கள் பூங்கொடி, தமிழரசி மற்றும் உதவிப் பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

The post புறவழிச்சாலையின் தரம் குறித்து பொறியாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Thiruchengode ,Chennai Highways Research Institute ,Saravanan ,Salem ,Akila ,Engineer ,Kathiresan ,Dinakaran ,
× RELATED பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்