குளித்தலை, பிப்.21: சேலம் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே வழக்கறிஞர்கள் கவின் மற்றும் தண்டபானி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், காஞ்சிபுரத்தில் ராஜேஷ் என்ற வழக்கறிஞர் மீது போலீசாரால் கொலை வெறி தாக்குதல் நடத்தபட்டதோடு அல்லாமல் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் மீதே பொய் வழக்கு பதிவு செய்ததை வன்மையாக கண்டித்து, தமிழ்நாடு – புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நேற்று (21ம் தேதி) மற்றும் இன்று (22ம் தேதி) நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பதென முடிவு செய்யப்பட்டது. இதனால் கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங் கிணைந்த நீதிமன்ற வக்கீல்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டதால் நீதிமன்ற பணிகள் பாதிப்பு ஏற்பட்டது.
The post குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு appeared first on Dinakaran.