×

எல்ஐசி ஊழியர்கள் போராட்டம்

சிவகங்கை, பிப். 21: சிவகங்கை எல்ஐசி அலுவலகத்தில் அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் ஊழியர்கள் ஒரு மணிநேரம் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். எல்ஐசி நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 3ம், 4ம் பிரிவு ஊழியர் பணி நியமனத்தை உடனே தொடங்க வேண்டும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் கர்ணன் தலைமை வகித்தார். கிளைச்செயலாளர் தனிஷ்ராஜ் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஆனந்தமூர்த்தி, கிருஷ்ணகுமார், பாட்ஷா, விஜய் மற்றும் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர். லட்சுமிராணி நன்றி கூறினார்.

The post எல்ஐசி ஊழியர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : LIC ,Sivaganga ,All India Insurance Corporation Employees' Union ,Dinakaran ,
× RELATED அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி