×

திருமங்கலம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் விஷம் குடித்த வாலிபர் பலி

திருமங்கலம், பிப். 21: திருமங்கலம் அருகே, குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். திருமங்கலத்தை அடுத்த தென்பழஞ்சியை சேர்ந்தவர் முருகேசன்(31). ஆந்திராவில் முறுக்கு வியாபாரியாக இருந்து வந்தார். இவரது மனைவி சசிகலா(27). இவர்களது 6 வயது மகள் அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் முருகேசன் கடந்த வாரம் ஆந்திராவில் இருந்து குடும்பத்தினரை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்தார்.

அப்போது, கணவன் – மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக்கொண்டு சசிகலா மகளுடன் தனது பெற்றோர் வீடு இருக்கும் கொக்குளத்திற்கு சென்றுவிட்டார். இதனால் மன வேதனையடைந்த முருகேசன், நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் விஷம் குடித்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மரணம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமங்கலம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் விஷம் குடித்த வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Murugesan ,Thenpalanchi ,Andhra Pradesh ,Sasikala ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி