×

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமா நாட்டுக்கு வந்தனர்: இந்திய தூதரகம் தகவல்

பனாமா சிட்டி: அமெ ரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பலர் பனாமா நாட்டுக்கு வந்தனர். அவர்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்தவர்களை வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்தியாவை சேர்ந்தவர்கள் உள்பட பல்வேறு நாட்டினர் இந்த நடவடிக்கையினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய 299 புலம் பெயர்ந்தோர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் விமானம் மூலம் பனாமா நாட்டுக்கு வந்துள்ளனர். இவர்கள் 3 விமானங்களின் மூலம் பனாமாவுக்கு வந்துள்ளனர். நாடு கடத்தப்படுவர்களையும் அமெரிக்காவையும் இணைக்கும் பாலமாக நாங்கள் செயல்படுவோம் என பனாமா அதிபர் ஜோஸ் ராவுல் மவுலினோ அறிவித்திருந்தார். இதையடுத்து, அவர்களை பனாமாவுக்கு அமெரிக்கா அனுப்பி வருகிறது. பனாமாவுக்கு வந்துள்ளவர்களில் இந்தியர்களும் உள்ளனர். அவர்களுடைய நலனை பாதுகாப்பதற்காக அந்த நாட்டு அரசுடன் பேசி வருவதாக பனாமாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

The post அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமா நாட்டுக்கு வந்தனர்: இந்திய தூதரகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Indians ,US ,Panama ,Indian Embassy ,Panama City ,Trump ,President ,Dinakaran ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...