×

விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளின் நினைவு நாளில் அவரை வணங்குவோம்: அன்புமணி ராமதாஸ்

சென்னை: “விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளின் நினைவு நாளில் அவரை வணங்குவோம், போற்றுவோம்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; ‘இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் தனி முத்திரைப் பதிக்கும் அளவுக்கு பங்காற்றிய வீரப் பெண்மணி கடலூர் அஞ்சலையம்மாளின் 64-ஆம் நினைவு நாள் இன்று. இந்த நாளில் அவரது வீரத்தையும், துணிச்சலையும் போற்றி வணங்குகிறேன்.

ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளைக் கண்டு அனைவரும் அஞ்சிய நிலையில், வெள்ளையர்களையே மிரள வைத்தவர் அஞ்சலையம்மாள். கொடியவன் நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். கடலூரில் அஞ்சலையம்மாளுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

The post விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளின் நினைவு நாளில் அவரை வணங்குவோம்: அன்புமணி ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : Veerangana ,Memorial Day ,Post Office ,Anbumani Ramadas ,Chennai ,Bhamaka ,President ,Cuddalore ,India ,Veerangan ,memorial ,
× RELATED மின்வேலியில் சிக்கி தபால் ஊழியர் பலி