- குரங்குகள் அடகாசம்
- பத்மநாபுரம்
- ராஜா திருவிதங்கூர்
- தகலா
- கால்குலம் அரசு ஓவர்பாஸ்
- தக்கலாயா
- பாரம் பாரியம் கட்டிடம்
- திருவிடங்கூர்
- பத்மநாபுரம்
- திருவிடங்கூர் சமஸ்தானா
- ராஜா
தக்கலை: தக்கலையை அடுத்த பத்மநாபபுரத்தில் கல்குளம் அரசு மேல்நிலைப்பளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் மிக முக்கியமான முகப்பு கட்டிடம் பாரம் பரியம் மிக்க கட்டிடத்தில் அமைந்துள்ளது. திருவிதாங்கூர் மன்னராட்சியின் போது பத்மநாபபுரம் தலைநகராக விளங்கியதுடன் அரண்மனையும் அமைந்திருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தன தேவைக்கான நாணயம் அச்சடிக்கும் கூடம் (கம்மாட்டம்) பத்மநாபபுரத்தில் அமைந்திருந்தது. இங்கு இரண்டு மாடிகள் கொண்ட கருங்கற்களால் கட்டப்பட்ட, காட்டு மரங்களை கொண்டு மேற்கூரை அமைத்த ஓட்டுக்கட்டிடத்தில் இப்பணிகள் நடைபெற்றது. திருவிதாங்கூர் சமஸ்தான தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்ட பிறகு இக்கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நாணயம் அச்சடிக்கும் கூடமும் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் இக்கட்டிடம் பாழடையத் தொடங்கியது. இந்நிலையில் 1956ல் குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்தது.
பாழடையத் தொடங்கிய இக்கட்டித்தில் தமிழக அரசு முதன் முதலாக அரசு நடு நிலைப்பள்ளியை தொடங்கியது. அது பின்னர் 1962ல் உயர்நிலைப்பள்ளியாகவும், 1995ல் மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. சுமார் ஒரு ஏக்கர் 55 சென்ட் பரப்பளவு ெகாண்ட இப்பள்ளி வளாகத்தில் அரசு தொடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் முகப்பில் அமைந்திருந்த பாரம்பரியமிக்க கட்டிடத்தில் தலைமை ஆசிரியர் அறை, ஆசிரியர்கள் ஓய்வறை, அலுவலகம், 4 வகுப்பறைகள் செயல்பட்டு வந்தது. தரைதளம் மற்றும் முதல் தளத்தை கொண்ட இக்கட்டிடத்தின் கூரைகள் ஓடுகளால் அமைக்கப்பட்டதாகும். இந்த முகப்பு கட்டிடம் தமிழக அரசின் பாரம்பரியமிக்க கட்டிட பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இத்தனை சிறப்புகள் உடைய கட்டிடம் குரங்குகள் அட்டகாசத்தால் நாள்தோறும் பாழ்பட தொடங்கியது.
குரங்குகள் இக்கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள ஓடுகளை பெயர்த்து தள்ளுவதால் ஓடுகள் அனைத்தும் கீழே சிதறி கிடக்கிறது. இக்கட்டிடத்தில் செயல்பட்ட வகுப்புகள் மாற்று கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு நடைபெற்று வருகிறது. எனினும் நாள்தோறும் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் கட்டிடம் முழுமையாக சேதமடையத் தொடங்கியுள்ளது. தக்கலை சுற்று வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இப்பள்ளியில் மட்டுமே பழமையான முகப்பு கட்டிடம் இடிபடாமல் உள்ளது. வரலாற்று ஆய்வர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் பெருமையாக இருந்தாலும் உரிய பராமரிப்பின்றி உள்ளதால் வரலாற்றின் தன்மை மறைந்துவிடுமோ என்ற அச்சமும் உள்ளது. இது குறித்து காங்கிரஸ் நகர தலைவர் ஹனுகுமார் தெரிவிக்கையில், சுமார் 130 வருடங்களை கடந்த இப்பள்ளியின் கட்டிடம் தற்போது பாழடைந்த வருகிறது. இக்கட்டிடம் ஒரு நீண்ட வரலாற்றை உள்வாங்கியதாகும். எனவே அதனுடைய தனித்தன்மை மாறாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றார். பொதுப்பணித்துறையின் பாரம்பரிய கட்டுமான பிரிவினர். இக்கட்டிடத்தை தொன்மை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
The post பத்மநாபபுரத்தில் குரங்குகள் அட்டகாசம்; பாழடையும் நிலையில் பாரம்பரியமிக்க அரசு பள்ளி கட்டிடம்: திருவிதாங்கூர் மன்னரால் கட்டப்பட்டது appeared first on Dinakaran.