திருப்பூர்: திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மற்றும் விவசாயிகளிடமிருந்து நேரிடையாக தோட்டங்களுக்கே செல்லும் வியாபாரிகள் காய்கறிகளை மொத்த விலைக்கு வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தின் கோவில்வழி, அவிநாசிபாளையம், பொங்கலூர், குண்டடம், மூலனூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகாள் குறுகிய காலத்தில் பயன் தரக்கூடிய வகையிலான பயிரான சுரைக்காய் சாகுபடியில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.
கொடி வகைப்பயிரான சுரைக்காய் வேகமாக வளரக்கூடியது. மேலும், பயிரிடப்பட்டு 30 நாட்களுக்குள் காய்ப்பு திறனுக்கு வருகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறுவடை செய்யலாம், 90 நாட்கள் வரை பலன் தரக்கூடியது என்பதால் ஏராளமான விவசாயிகள் சுரைக்காய் சாகுபடி செய்ததன் விளைவாக கடந்த மாதம் முதல் சுரைக்காய் வரத்து அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வரத்து அதிகரிப்பால் விலை குறைந்து 15 கிலோ எடைகொண்ட சுரைக்காய் பை ஒன்று ரூ.50 முதல் ரூ.100 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. எதிர்பார்த்த விலை இல்லாததால் நஷ்டத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெருவித்தனர்.
The post திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பால் சுரக்காய் விலை குறைவு appeared first on Dinakaran.