அரியலூர், பிப். 20: விவசாயிகள் குறை தீர் கூட்டம் நாளை நடப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பிப்ரவரி- 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை பிப்ரவரி 21 வெள்ளிகிழமை அன்று காலை 10 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.
The post அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் appeared first on Dinakaran.