முத்துப்பேட்டை,பிப்.20: முத்துப்பேட்டை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் கண்ணொளி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் உள்ளன. இப்பள்ளியில் சிறார் மருத்துவ திட்டத்தின் கீழ் தமிழக அரசின் கண்ணொளி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் கண் பரிசோதனை செய்யப்பட்டதில் இரண்டு மாணவர்கள் முத்து பாலா, சஞ்சீவி பாலா ஆகியோருக்கு நேற்று மருத்துவத்துறையில் கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
வட்டார கல்வி அலுவலர் ராமசாமி மற்றும் சுகாதாரத்துறை பணியாளர் வேதமூர்த்தி மற்றும் தலைமை ஆசிரியர் வாசுகி ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கினர். மேலும் பள்ளியில் 4ம் வகுப்பு வட்டார கல்வி அலுவலரால் செயலியில் பார்வையிடப்பட்டது. அதேபோல் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 6, 7, 8 வகுப்புகளுக்கான நூலக புத்தகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாணவர்கள் படித்த கதைகளை மாணவர்கள் கூறினர். அதேபோல் வட்டார கல்வி அலுவலரும் கதை கூறினார். இதில் வகுப்பு ஆசிரியர் மாலதி உடன் இருந்தனர்.
The post முத்துப்பேட்டை அருகே மாணவர்களுக்கு கண் பரிசோதனை appeared first on Dinakaran.
