மயிலாடுதுறை, பிப்.20: மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் பிப்ரவரி 19ம் தேதியை கருப்புதினமாக அனுசரித்து நேற்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள், காவல் துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்ட பிப்ரவரி 19ம் தேதியை நீதித்துறைக்கு ஏற்பட்ட கருப்பு தினமாக அனுசரிக்கும்படி கடந்த 2009-ம் ஆண்டு முதல் ஜேஏஏசி பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அன்று முதல் பிப்ரவரி மாதம் 19ம் தேதியை கருப்பு தினமாக வழக்கறிஞர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
அதன்படி கருப்பு தினமாக நேற்று மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கத் தலைவர் கருணாநிதி, மயிலாடுதுறை சங்கத் தலைவர் வேலு குபேந்திரன் உள்பட வழக்கறிஞர்கள் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதி்ல், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும். மத்திய அரசின் புதிய வழக்கறிஞர்களின் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு செய்து கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
The post மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.