×

எல்ஐசி சார்பில் ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்

சென்னை: எல்ஐசியின் ஸ்மார்ட் ஓய்வூதிய திட்டம், மத்திய நிதி அமைச்சகத்தின் செயலாளர் எம்.நாகராஜு, மத்திய நிதி சேவைகள் துறையின் உதவி செயலர் டாக்டர் எம்.பி.டாங்கிராலா மற்றும் இணை செயலர்  பர்ஷாந்த் குமார் கோயல், எல்ஐசியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் சித்தார்த்த மொஹந்தி மற்றும் எல்ஐசியின் பிற மேலாண்மை இயக்குநர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது.எல்ஐசியின் ஸ்மார்ட் ஓய்வூதிய திட்டம், லாபத்தில் பங்கு பெறாத பங்கு சந்தை சாராத தனிநபர்/ குழு, சேமிப்பு மற்றும் உடனடி பென்ஷன் திட்டமாகும். இது ஒற்றை ஆயுள் மற்றும் இணை ஆயுள் வகை பென்ஷன் திட்டங்களுக்கு பல்வேறு விருப்ப தேர்வுகளை வழங்குகிறது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

* ஒற்றை பிரீமிய, உடனடி பென்ஷன் திட்டம்.வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்றவாறு பல்வேறு பென்ஷன் விருப்ப தேர்வுகள் உள்ளன. குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 65 முதல் 100 ஆண்டுகள். பென்ஷன் விருப்பத்தைப் பொறுத்து இது மாறுபடும். ஒற்றை ஆயுள் பென்ஷன் மற்றும் கூட்டு ஆயுள் பென்ஷன். விருப்பங்களிலிருந்து தேர்வுசெய்யும் நெகிழ்வுத்தன்மை.ஏற்கனவே உள்ள பாலிசிதாரர் மற்றும் பாலிசியில் இறப்புரிமை பெற்ற நாமினி / பயனாளிகளுக்கு அதிக பென்ஷன் தொகை.

பாலிசி விதிமுறை களின்படி பாலிசி தொகையை பகுதியாக / முழுவதுமாக திரும்பப் பெறுவதற்கு பல விருப்ப தேர்வுகள். குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதலீடு. அதிக முதலீட்டு தொகைகளுக்கு ஊக்கத்தொகைகளுடன் கூடிய பென்ஷன். பென்ஷன் தொகை ஆண்டு, அரை ஆண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர தொகையாக விருப்பத்திற்கேற்ப பெறலாம். என்பிஎஸ் சந்தாதாரர் உடனடியாக இந்த திட்டத்தில் சேரும் வாய்ப்பு ஒரு சிறப்பு அம்சமாகும். மாற்றுத்திறனாளி சார்ந்த நபரின் நலனுக்காக திட்டத்தை எடுக்கும் வசதி இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கிறது

இந்த திட்டத்தை www.licindia.in-ல் ஆன்லைன் மூலம் பெறமுடியும். பாலிசி துவங்கிய 3 மாதங்களுக்குப் பிறகு (அதாவது பாலிசி வழங்கப்பட்ட தேதியிலிருந்து 3 மாதங்கள்) அல்லது மீள் ஆய்வு காலத்திற்கு பிறகு குறிப்பிட்ட பென்ஷன் விருப்பங்களின் கீழ் எந்த தேதி பின்னர் வருகிறதோ அந்த தேதிக்கு பிறகு பாலிசி கடன் பெறும் வசதி உண்டு.வாழ்வு கால பயன்கள்: பாலிசிதாரர் தொடக்கத்தில் தேர்ந்தெடுத்த பென்ஷன் தொகை/ தவணை விருப்பத்திற்கு ஏற்ப மாறுபடும்.

இறப்புரிமை தொகை: (தனி நபர் / இணையர்) இறப்பு பலன் மொத்த தொகையாகவோ, பகுதி தொகைகளாகவோ, மேம்படுத்தப்பட்ட பென்ஷன் தொகையாகவோ, பென்ஷன் சேமிப்பு திரட்டு தொகையாகவோ பெறும் வசதி உண்டு. இந்த திட்டத்தை முகவர்/ மற்ற ஆயுள் காப்பீட்டு விற்பனை இடைத்தரகர்கள்/ பொது சேவை மையங்கள் மூலம் ஆப்லைனிலும், www.licindia.in வலைத்தளம் மூலம் நேரடியாக ஆன்லைனிலும் பெற இயலும்.

The post எல்ஐசி சார்பில் ஸ்மார்ட் பென்ஷன் திட்டம் appeared first on Dinakaran.

Tags : LIC ,Chennai ,Ministry of Finance ,M. Nagaraju ,Assistant Secretary ,Department of Federal Financial Services ,Dr. ,M. B. Tangerala ,Parshant Kumar Goyal ,CEO ,Dinakaran ,
× RELATED சென்னை வானகரத்தில் லிப்டில் சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்..!!